போவோம் எல்லோரும் கூடி - பொன்னான மதீனாவை நாடி

மதீனா ஷரீப், அது அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய பூமி, தன் பிரியத்திற்குரிய தன் நேசராகிய முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வதற்காகவும் அவர்களின் புனித உடலை தாங்குவதற்காகவும் இறைவனே செப்பனிட்டு செம்மை படுத்தி தயார் செய்து வைத்த புனித பூமி.

எப்படி பெருமான் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் மூலம் மக்காவிற்கு இறைவன் சிறப்பு சேர்த்தானோ, அப்படி அவர்களின் பூ உடலை புனித மேனியை உலகம் இருக்கும் காலமெல்லாம் சுமந்து சிறப்புறும் பாக்கியத்தை அல்லாஹ் மதீனா ஷரீபிற்கு வழங்கினான்.

எனவே தான் எம் பெருமானார் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தம் நேசர்களை மதீனாவை நோக்கி வருமாறு அழைக்கிறார்கள்.

தன்னை தரிசிக்க வருபவர்களுக்கு தகுந்த சன்மானங்களையும் வழங்குவதாக வாக்களித்து வரவேற்கிறார்கள்.


عن ابن عباس مرفوعا بلفظ: من حج إلى مكة ثم قصدني في مسجدي كتب له حجتان مبرورتان

யார் ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு வந்து, பின்பு என்னை நாடி என் மஸ்ஜிதிற்கு வந்தாரோ அவருக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ஹஜ்ஜுடைய நன்மை நல்கப்படும். ( ரவாஹ். இபுனுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு)


من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي

யார் ஹஜ்ஜு செய்து விட்டு என் மறைவிற்குப்பின் என் கப்ரை தரிசிக்க வந்தாரோ அவர் என் வாழ்விலேயே என்னை சந்தித்தவராவார். (நூல் - தாரகுத்னீ)


مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي

யார் என்னுடைய கப்ரை ஜியாரத் செய்தாரோ அவருக்கு என்னுடைய ஷபாஅத் - பரிந்துரை வாஜிபாகி விட்டது. என்றார்கள். (நூல் - தாரகுத்னீ)


(من زار قبري أو قال من زارني كنت له شفيعا أو شهيدا)

யார் என் கப்ரை ஜியாரத் செய்தாரோ (அல்லது) என்னை ஜியாரத் செய்தாரோ அவருக்கு நான் பரிந்துரைப்பவராக (அ) சாட்சியாளராக ஆகிவிட்டேன். (அபூதாவூத்)


من جاءني زائرا لا تعمله حاجة إلا زيارتي كان حقا علي أن أكون له شفيعا يوم القيامة

யார் என்னை ஜியாரத் செய்வதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லாமல் என்னை ஜியாரத் செய்வதற்காகவே வந்தாரோ அவருக்கு மறுமை நாளில் ஷபாஅத்-பரிந்துரை செய்வது என் மீது கடமையாகிவிட்டது. (தப்ரானி)


من زارني بالمدينة محتسباً كنت له شفيعاً شهيداً يوم القيامة

யார் நன்மை நாடி மதீனாவிற்கு வந்து என்னை ஜியாரத் செய்தாரோ அவருக்கு நான் மறுமை நாளில் சாட்சியாளராகவும் ஷபாஅத் செய்யக் கூடியவராகவும் ஆகிவிட்டேன். (பைஹகீ)


من زارني متعمداً كان في جواري يوم القيامة

யார் வேண்டுமென்றே என்னை  ஜியாரத் செய்தாரோ அவர் மறுமையில் என் அருகில் அமைந்து விட்டார்.  (பைஹகீ - ஃபீஷுஅபில் ஈமான்)


عن أبي هريرة قال قال رسول الله : ما من عبد يسلم علي عند قبري إلا وكل الله به ملكا يبلغني وكفي أمر آخرته ودنياه وكنت له شهيدا وشفيعا يوم القيامة ( البيهقي ).

எந்த ஒரு அடியார் என் கப்ரில் நின்று என் மீது ஸலாம் சொல்கிறாரோ அவரைக் கொண்டு அல்லாஹ் ஒரு மலக்கை ஏற்படுத்தி விடுகிறான். அவர் என்னிடம் எத்தி வைக்கிறார். அவருடைய இம்மை மறுமை காரியங்களுக்கு இதுவே போது மானதாகி விடுகிறது. நான் அவருக்கு மறுமையில் சாட்சியாளராகவும், ஷபாஅத் செய்யக் கூடியவருமாகி விடுகிறேன்.


இன்னும் இது போன்ற அனேக நபி மொழிகளின் வழியே ஜியாரத் செய்வதன் அவசியத்தையும், அகமியத்தையும் அதனால் பெறப்போகும் பயன்களையும் உணர முடிகிறது.

 

மதீனா மாண்புயர் பூமி:

இறைவன் படைத்த எல்லா படைப்பினங்களிலும் ஒன்றை விட ஒன்றை சிறப்பாக்கி வைத்துள்ளான்.அதனால் மற்றது சிறப்பில்லை என்பது பொருள் அல்ல. இறைவன்  படைத்த  அனைத்து படைப்பினங்களிலும் ஒன்றை விட ஒன்றை சிறப்பாக்கியுள்ளான். அந்த அடிப்படையில் சில மாதங்களை , சில நாட்களை  சில நேரங்களை , சில இடங்களை சிலதை விட சிறப்பாக்கியுள்ளான்.

அந்த அடிப்படையில் மக்கா மதீனா இரண்டுமே அமல்கள் செய்வதற்கும், இறைவனுக்கு மிகவும் விருப்பமான இடங்களாகும். எனவே மக்கா, மதீனா இந்த இரண்டு பூமிகளிலும்  சிறந்தது எது என்று வரும்போது மதீனா தான் சிறந்தது என்று மார்க்க அறிஞர்கள் கருத்துக்களை கூறியுள்ளார்கள். சிலர் மக்கா சிறந்தது என்றும், இன்னும் சிலர் மதீனா சிறந்தது என்றும் கூறியுள்ளனர். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித உடல் மற்றும் கஃபாவையும் சேர்த்து இவற்றில் எது மிகச் சிறந்தது என்ற கேள்விக்கு அனைத்து ஸஹாபாக்கள், இமாம்களின் ஏகோபித்த முடிவு மதீனா தான் சிறந்தது என்பதாகும்.

ஏனெனில், மதீனாவில்தான் அண்ட சராசரங்களுக்கும் ரஹ்மத்தாக வந்துதித்த எம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித உடல் உள்ளதால் ஆகும். என மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநர்களும், ஷரிஅத்தின்  சட்ட நிபுணர்களுமான இமாம் முல்லா அலி காரி ரழியல்லாஹு அன்ஹு , இமாம் காழி இயாழ் ரழியல்லாஹு அன்ஹு , இமாம் இப்னு  ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹும்) போன்றோர் தமது பத்வாக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று சிலர் கூறுவார்கள் : மதீனாவை விட மக்கா தான் சிறந்தது ஏனெனில் மக்காவில் தொழுதால் ஒரு லட்சம் நன்மைகள் கிடைக்கும் மதீனாவில் தொழுதால் ஆயிரம் நன்மைகள்தான் கிடைக்கும், இன்னும் மக்காவில்தான் இறைவனின் இல்லம் கஃபதுல்லாஹ்,  ஹஜருல் அஸ்வத் கல், ருக்னுல் யமானீ, மகாமு இப்ராஹீம் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கால் பதிந்த இடம், ஸபா - மர்வா மலைகள், ஸம் ஸம் நீர் உள்ளன. எனவே மக்காதான் சிறந்ததுஎன்று கூறுவார்கள்.

ஆனால் மேலே கூறப்பட்ட அனைத்தும் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? கண்மணி நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தான். ஆகவே அவர்கள் இல்லையென்றால் இறைவனின் இல்லம் கஃபதுல்லாஹ், ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ, மகாமு இப்ராஹீம், ஸபா - மர்வா மலைகள், ஸம் ஸம் நீர் ஏன் மக்காவே கிடையாது. உங்களை படைக்காவிட்டால் இவ் வையகமே இல்லை என அல்லாஹ்வே கூறியிருக்கிறான்.

 

மாமதீனா தான் மிகச் சிறந்தது என்பதற்கு  நபி மொழிகளில் இருந்து சில சான்றுதல்கள்:

(حديث مرفوع) أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ شَعْبَانَ ، قَالَ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الرَّازِيُّ ، قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَدَّادٍ ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَتْ : " تَكَلَّمَ مَرْوَانُ يَوْمًا عَلَى الْمِنْبَرِ فَذَكَرَ مَكَّةَ ، فَأَطْنَبَ فِي ذِكْرِهَا وَلَمْ يَذْكُرِ الْمَدِينَةَ ، فَقَامَ إِلَيْهِ رَافِعُ بْنُ خَدِيجٍ ، فَقَالَ : مَا لَكَ يَا هَذَا ، ذَكَرْتَ مَكَّةَ فَأَطْنَبْتَ فِي ذِكْرِهَا وَلَمْ تَذْكُرِ الْمَدِينَةَ ؟ وَأَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " الْمَدِينَةُ خَيْرٌ مِنْ مَكَّةَ " .

ஒரு நாள் மர்வான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மிம்பரிலே மக்காவின் (சிறப்புகள்) பற்றி நீண்ட நேரம் கூறிக்கொண்டிருந்தார்கள், ஆனால் மதீனாவைப் பற்றி கூறவில்லை. அந்த சமயம் ராபிfஃ இப்னு கதீஜ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் :  எழுந்து 'உங்களுக்கு என்ன நடந்து விட்டது? நீங்கள் மக்காவைப் பற்றி நீண்ட நேரம் கூறினீர்கள், மதீனாவைப் பற்றி கூறவில்லையே ' என கேட்டு விட்டு, நான் சாட்சி கூறுகின்றேன். நிச்சயமாக நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : 'மக்காவை விட மதீனா சிறந்தது' என கூறியதை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : அம்ரத் பின்தி அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹுமா) (நூல் : முஅத்தா, பாகம் 1,ஹதீஸ் எண் 18,  புகாரி ஃ பீ தாரீகில் கபீர் }


இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:  ”பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!”  என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஷஹீஹ் புகாரி 1876)


நிச்சயமாக இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மக்கமா நகரத்தை சங்கைப்படுத்தி புனிதம் மிகுந்ததாக ஆக்கினார்கள். நான் மதீனமா நகரத்தை சங்கைபடுத்தி புனிதமாக்கியிருக்கிறேன். 
(நூல்: முஸ்லிம், இப்னு மாஜா)


இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:”இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!” என அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஷஹீஹ் புகாரி 1885, முஸ்லிம், மிஷ்காத்)


இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:  ”தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!”  என அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஷஹீஹ் புகாரி - 1878)


இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:  ”என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்! என்னுடைய மிம்பர் என்னுடைய ஹவ்ள் (அல்கவ்ஸர் தடாகத்தின்) மீது அமைந்துள்ளது!”  என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். (ஷஹீஹ் புகாரி-1888).


மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்து விடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன்.


உமர் (ரலியல்லாஹு அன்ஹு) இவ்வாறு துஆ செய்தார்கள் .

”இறைவா! உன் பாதையில் வீர மரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து'. (ஷஹீஹ் புகாரி 1890)


ஆகவே அருள் வேண்டி மாமதீனா செல்வோம் வாருங்கள்

"றஹ்மத்துலில் ஆலமீன்" மதீனாவில்தான் இருக்கிறார்கள், சொர்க்கத்தின் பூங்காவனம் அவர்கள் அருகே தான் உண்டு, கியாமத் நாள் நெருங்கும் போது ஈமான் ஒதுங்கும் இடமும் மதீனாதான் , எனவே மக்காவை விட மதீனா மிகச் சிறந்தது என்பது தெளிவாகின்றது. 

 

மதீனா பள்ளி (மஸ்ஜித் நபவி)யால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சிறப்பு கிடைத்ததா? அல்லது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் மதீனா பள்ளிக்கு சிறப்பு கிடைத்ததா?

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்ற போது மதீனாவில் பள்ளிவாசலே இருக்க வில்லை மாறாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சொந்த பணத்தாலும், முயற்சியினாலும் மஸ்ஜித் நபவியை கட்டினார்கள் எனவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால்தான் மதீனா பள்ளிக்கு சிறப்பு  கிடைத்தது. உலகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசலுக்கும் பல பெயர்கள் இருந்தாலும்  இறைவனின் பள்ளிவாசல் என்றுதான் சொல்வார்கள். அப்படிதான் சொல்ல வேண்டும் ஆனால் மதீனா பள்ளியினை மாத்திரம் இறைவனின் பள்ளி என்று யாரும் சொல்வதில்லை. மாறாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளி  மஸ்ஜிதுன்னபவி என்றுதான் சொல்ல வேண்டும் அப்படிதான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்“.  என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஷஹீஹ் புகாரி 1190, முஸ்லிம்) போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பார்கலாம்.


இமாம் காளி இயாள் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் மற்றுமுள்ள மார்க்க அறிஞர்கள் பெரும்பாண்மையோர் '' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என தீர்ப்பளித்துள்ளனர். (நூல் :இத்திஹாப் பாகம் 4: பக்கம் 416,417)


சில நல்லோர்கள், உலமாக்கள்,இமாம்கள் மற்றும் 'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீப், கஃபா, பைத்துல் முகத்தஸைக்காட்டிலும் சிறந்தது எனத் தீர்ப்பளித்து விசுவாசத்தின் விளை நிலமான நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கண்ணியம் செய்வதே ஈமானைத் தக்க வைத்து கொள்ளும் உபாயம் என உபதேசம் செய்துள்ளார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் ஜர்கஸீ, அபதீ (ரஹ்மதுல்லஹி அலைஹிமா) போன்ற பேரரிஞர்களாவர். (நூல் :வஃபாவுல் வஃபா 1: 83)

 

மதீனாவின் மாண்பு  குறித்து மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணி மொழிகளில் சில:

எல்லாம் வல்ல கிருபையாளன் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதீனா (ரவ்ழா ஷரீபுக்கு) சென்று ஜியாரத் செய்யும் நற் பாக்கியத்தை திரும்பத்திரும்பத் தருவானாக ஆமீன் .